இளைப்பாறுதல் 5

நமக்கு பிடித்தவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ அல்லது அவருக்கு ஏதேனும் சிறப்பான நாள் என்றாலோ நம்மால் எதுவும் செய்ய முடியாத தருணம் உள்ளதே அதை நீங்கள் அனுபவத்திருக்கிறீர்களா?
அது மிகவும் கொடுமையானது…
அந்த தருணம் யாருக்கும் வந்துவிடக்கூடாது. ஆனால் அந்த தருணம்தான் எனக்குள் ஒரு ஆசையைத் தூண்டியிருக்கிறது. பணம்…

ஆம்…
பணம்… பணம்… பணம்…
நாம் நமக்கான பணத்தை இன்னும் சேர்த்து வைக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு.
நாட்டில் நடக்கும் பல்வேறு அசம்பாவிதங்களுக்கு இரண்டு காரணங்கள் உண்டு…
ஒன்று பதவி…
இன்னொன்று கட்டாயம் பணம்…
பணம்… பதவியைத் தக்க வைக்க உதவுகிறது…
சாட்சிகளை காணமற்போகச் செய்கிறது…
போபால் விஷவாயுவில் தப்பியோடிய ஆண்டர்சன் போல நமக்கும் பணம் பெரிய உதவிகளைச் செய்யும்…
தவறு  செய்பவர்கள் இறுதியில் துயரமான மரணத்தை தழுவுவர் என்பார் முன்னோர்கள்… ஆனால் ஆண்டர்சன் நல்ல மரணத்தை அதாவது எந்த தொந்தரவும் அற்ற நிம்மதியான மரணம்….
அவன் நல்லவன்… என்று கூற போபால் விஷவாயு நடந்த இடத்தில் இருப்பவர்கள் கூறுவார்களா? அவர்களின் வசைமொழிக்கு ஆட்பட்டு வாழ்ந்தவன்…. தனது இறுதிக் காலத்தை நிம்மதியாக கழித்திருக்கிறான்…
ஆனால் நம்நாட்டில் தினம் தினம் மரணத்தை  தழுவும் ஏழைகள் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் துயரம் எத்தகையது…
சுடுநீரை கையில் ஏந்தி ஓடுவது போன்றது…
சிறு பட்சிகள் நம்மை கடித்தால் வலிக்கும் வலி போன்றது….
நிம்மதியாகவும் இருக்க முடியாமல்… துன்பத்தையும் அனுப்பவிக்க முடியாமல் தவிக்கும் அவர்களின் வாழ்வதாரம் பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது…
நடிகர்கள்… நடிகைகள் எல்லோரும் ஊரைச் சுத்தம் செய்வதாய் விளம்பரத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஊர் சுத்தம் என்பதெல்லாம்… அவர் அவர் வீட்டை அவரவர் சரியாகச் சுத்தம் செய்து கொண்டாலே போதும்… விதிமுறைகளை சரியாகப் பின்பற்றினாலே போதும்… இதில் என்ன வேண்டிக்கிடக்கு விளம்பரம்…
ஒன்று தான் இறுதியாக பணம்… அது உள்ளவர்கள் இல்லாதவர்களுக்காக சற்றுக் கொடுங்கள்… அல்லது உங்கள் வரியைச் சரியாக கட்டுங்கள்…
தனிமனிதன் ஒழுக்கமே இந்த நாட்டின் வளர்ச்சி…

லேபிள்கள்: