அன்புள்ள குட்டிமாவுக்கு

அன்புள்ள குட்டிமாவுக்கு
ஆயிரம் முத்தங்களோடு அன்பிற்குரியவன் எழுதுவது

ஓர் எதிர்பார நேரத்தில்
உன் கன்னத்தில் பதித்த
முதல் முத்ததில் தொடங்கியது
என் காதல்...


ஓர் அரை இரவு முழுவதும்
கண்விழித்து
உனை ரசித்ததில்
எனை மறந்த கதை சொல்லலாம்...

உன்னை
இறுக அணைத்துக் கொண்டு
உறங்கிய பின்னர்
தனிமையான உறக்கங்கள்
துயரமானதை எப்படிச் சொல்வேன்...

உன் உதட்டுச்
சுவையினை சுவைத்த பின்னர்
இனிப்புகள் வெறும் பொருள்களாக
மாறிப்போனதாகவே உணர்கிறேன்...

தேவதைகள் உலாவரும்
என் கனவுகளில்
தேவதைகளின் தேவியாய்
நீ வருகிறாய் இப்பொழுதுதெல்லாம்...

அத்தை மகளாய் பிறந்தவளே & நீ
அத்தனைக்கும் எனக்கானவளாய்
ஆகிப்போனதை எண்ணினால்
ஆச்சரியம்தான்...

சொர்க்கத்தை
விண்ணில் தேடும்
மடையர்கள் மத்தியில் & உன்
மடியில் சொர்க்கம் அடைந்துவிட்ட
மகா பாக்கியவான் நான்...

என் மௌனங்களில்
உன் நிறைந்தோடின...
என் வார்த்தைகளில்
உனக்கான கவிதை
கசிந்துருகின...

உன் குரல் கேட்க
உன் முகம் பார்க்க
உன்னை கட்டியணைக்க
கவிதை சொல்ல
காலார நடக்க
காதல்  சொல்ல
காதல் கேட்க
சண்டை பிடிக்க
சமாதானம் சொல்ல
சோறூட்ட
தாலாட்ட
தலைகோதிவிட
நகம் வெட்டிவிட
என நீள்கிறது
உன் மீதான காதல்

என் துயரங்களை மறக்க
என் இன்பங்களை இரட்டிப்பாக
என் வாழ்வை வளமாக்க
எனக்கானதாக இல்லாத ஒரு வாழ்வை
உனக்கானதாக மாற்றும் என் காதல்...

என் கனவுகள்
கொஞ்சம் நீளமானதாகவும்
என் நினைவுகள்
உன் தாங்கும் தூண்களாகவும்
மாறிப்போனதை
உன்னிடம் சொல்லவிட வேண்டும்...

நீ கொடுத்த முதல்
முத்தத்தில்
சிவந்துபோனது கண்ணம்
அன்றைய தினத்தை
என் வாழ்வின்
உன்னதமான நாளாக
மாறிப்போனது...

எண்ணற்ற காயங்கள்
தந்தாலும்
என்னுயிராகி நீ மாறிப்போனதை
உணர்கிறேன்...

ஒவ்வொரு
நொடியும்
உனக்கானதாக நகரும்
நீ என்னோடு வாழும் நாள்
வெகுதொலைவில் இல்லை...

மிக அருகில்...
ஆயிரமாயிரம் முத்தங்களோடு
உன் இதயம்...

லேபிள்கள்: