இப்பொழுதெல்லாம் பள்ளியில் சேர்ப்பதென்பது
ஆயிரங்களில் நிகழும் ஒன்றாகவே உள்ளது.
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கே
இருபதாயிரம், ஒரு லட்சம் வரை செலவு செய்ய பெற்றோர்கள் தயாராக இருக்கிறார்கள் போலும்.
போதாக் குறைக்கு பெற்றோர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் கூட சில பள்ளிகள் நடத்துகின்றன.
காரணம்...
பள்ளிக்கல்வி தனியார் மயமானதால்
தானா?
என்னை பள்ளியில் சேர்த்த அனுபவம்
மிகவும் இனிமையான தருணமாகவே என்றும் மனதில் இருத்தில் மகிழ்ச்சி கொள்ளும் விதமாகவே
இருக்கிறது.
பத்து ருபாய் நோட்டு, கொஞ்சம்
கல்லை, மிட்டாய் வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் கூட்டிச் சென்றாள் அம்மா. தலைமை ஆசிரியரிடம்
ஏதோ பேசினார்.
என் கைகள் தலைக்கு மேல் சென்று
காதை தொடுமாறு சொன்னார்கள். தொட்டது. ஒண்ணாவது டீச்சரிடம் கூட்டிப்போங்கள் என்று கூறிவிட்டார்.
அங்கிருந்த டீச்சர் எனக்கு மிகப்பெரிய
பாடத்தை பின்னாளில் சொல்லிக் கொடுக்கும் தன்மை வாய்ந்தவர் என்பது அப்போது எனக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...
சிரித்த முகத்தோடு அம்மாவிடம்
இருந்த தட்டில் மிட்டாய் இரண்டை எடுத்துக்கொண்டு என்னை வகுப்பறைக்குள் சேர்த்துக்கொண்டார்.
வகுப்பில் தந்த தொல்லைகள் இருக்கிறது...