இறப்பதைக் குறித்து உங்களுக்கு ஏதேனும் அனுபவம் உண்டா என்று கேட்டால் அது முட்டாள்தனமான கேள்வியாகத்தான் இருக்கும். ஆனால் பசி என்ற ஒன்ற வந்துவிட்டால் அதனை பொறுக்கமாட்டாமல் இறப்பதே மேல் என்ற எண்ணம் வந்துவிடும்...
வீட்டைவிட்டு ஓடிய பொழுது பசி என்னை மிகவும் வாட்டிய பொழுது இறந்துவிட நினைத்து பெங்களுர் - ஓசுர் நெடுஞ்சாலையில் வண்டியில் வீழ்ந்து இறந்துவிடுவோம் என்ற எண்ணம் வந்தபொழுதுதான் வாழ்தல் குறித்த அனுபவம் எனக்குக் கிட்டியது.
இறப்பது ஒரு நிமிடச் செயல் என்றாலும்... அதற்கு ஒரு மன தைரியம் வேண்டும். அதே மன தைரியம்தான் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் பயன்படுகிறது. இதனை உணர நான் இறக்கத் தயாராக இருக்க வேண்டியிருந்தது...
உண்மைதான்...
லேபிள்கள்: இளைப்பாறுதல்